கோவை பா.ஜ.க. அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதம்

கோவை : கோவையில் பா.ஜ.க. அலுவலகம் முன்பு உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கோவையில் பா.ஜ.க. அலுவலகம் முன்பு உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக ஜே.பி. நட்டா பதவி ஏற்றதுக்கு வாழ்த்து தெரிவித்து கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் முன்பு பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை அந்த சாலை வழியாக சென்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றக்கோரி பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் உடனடியாக அகற்றப்பட்ட வேண்டும் என டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலான வாக்குவாதத்திற்குப் பிறகு அந்த பேனர் அகற்றப்பட்டது. 



இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறுகையில், "தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உடனடியாக அபராதம் விதிக்கும் காவல்துறை, மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நீதிமன்ற உத்தரவையும் மீறி இதுபோன்று பேனர் வைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என குற்றம் சாட்டினார். இதன் பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....