சென்னை : தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்புக் குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி, குறைதீர் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு எடுத்து வரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களைப் பெற்று, தீர்வு காண முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை / நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும்.
மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும். பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும். மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்புத் திட்டமாக இத்திட்டம் திகழும். இந்த சிறப்புத் திட்டத்தை செம்மையாக நடைமுறைபடுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.