திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா தேவி. இவருக்கும் கோவை செல்வபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவண ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பெண் வீட்டார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகும் சரவண ராஜ்குமார், யமுனா தேவியை அவரது பெற்றோரிடம் கூடுதல் பணம், நகை வாங்கி வருமாறு கேட்டு வற்புறுத்தியுள்ளார். மேலும், இதற்காக அவரை துன்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி யமுனா தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, புகாரின் பேரில் முதலில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் யமுனா தேவி வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில், நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில் சரவண ராஜ்மாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.