கொடிசியா சார்பில் 10 நாட்கள் நடக்கும் கோவை புத்தக் கண்காட்சி தொடக்கம்

கோவை : கோவையின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழாவான கோவை புத்தகத் திருவிழா 5-ம் ஆண்டாக நேற்று தொடங்கியது.


கோவை : கோவையின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழாவான கோவை புத்தகத் திருவிழா 5-ம் ஆண்டாக நேற்று தொடங்கியது.



கோவை கொடீசியா தொழில்முனைவோர் கூட்டமைப்பும், பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நேற்று மாலை துவங்கியது. புத்தகத் திருவிழாவினை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவங்கி வைத்தார். நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சி வரும் 28-ம் தேதி வரை கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது. 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசியதாவது :- இன்றைய இளைய தலைமுறையினரின் மத்தியில் உள்ள பகைமை, ஏற்றத் தாழ்வுகள் கவலை கொள்ளச் செய்கிறது. அவர்களை ஆக்கப்பூர்வமாக மாற்றப் புத்தகத் திருவிழாக்கள் அவசியமாகின்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வாசிப்புக் பழக்கத்தை அனைத்து ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவரும் சமூக முன்னேற்றத்திற்காகவும், அக்கறையுடன் செயல்படுபவர்கள். அவர்களை நாம் போற்ற வேண்டும். என் இளமைக் காலத்தில் வாசிப்புப் பழக்கத்தினை என் தந்தை ஊக்குவித்தார். காந்தியம், மார்சியம், ஆன்மீகம் என அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்களைப் படிக்க ஊக்குவித்தார். அது என் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக மாற்றியது.



கோவை புத்தகத் திருவிழாவில் தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. தொழிலகம் தோறும் நூலகம் மூலமாக தொழிலாளர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் வரவேற்புக்குரியது, என்று சிறப்புரை வழங்கினார். 



நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய கொடீசியா அமைப்பின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி பேசியதாவது :- சமூக முன்னேற்றத்திற்காக தன் பங்களிப்பாக கொடீசியா இந்த கோவை புத்தகத் திருவிழாவினை நடத்துகின்றது. புத்தகங்கள், மனங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் அனைவரும் புத்தக வாசகர்கள். அடுத்த தலைமுறையினரையும் ஆக்கப்பூர்வமான தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புத்தகத் திருவிழாவினை நடத்துகின்றோம். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த புத்தகங்கள் கண்காட்சியில் கிடைக்கும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கெடுத்து உள்ளனர். இலக்கிய நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், என பல நிகழ்வுகள் பத்து நாட்களும் நடைபெறவுள்ளன, என்று பேசினார். 



கோவை புத்தகத் திருவிழாவின் தலைவர் விஜய் ஆனந்த் பேசுகையில், "இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் வண்ண நிலவனுக்கு வழங்கப்படுகிறது. மற்றும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புனைவு, அபுனைவு, கவிதை பிரிவுகளில் எழுத்தாளர்கள் குணா கந்தசாமி, சோலை மாயவன், ஞா.குருசாமி ஆகியோருக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது. கொடீசியா மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் 3,600 பேர் பங்கெடுத்துள்ளனர். அவர்களில் ஆயிரம் பேருக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

150 பதிப்பகங்கள், 250 விற்பனையகங்களில் பங்கெடுக்கின்றனர். அனுமதி இலவசம். மக்களுக்கு வசதியாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவினாசி சாலையில் இருந்து கொடீசியா வரை வந்து செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் நேற்று முதல் 28 வரை அவினாசி சாலை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் ஜென்னிஸ் வழியாக கொடீசியா வரை வந்து செல்லும்," என்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் இலக்கியக் கூடல் தலைவர் டி. பாலசுந்தரம், அறிவுக்கேணி தலைவர் இ.கே.பொண்ணுசாமி, செயலாளர் தேவராஜன், கோவை புத்தக் கண்காட்சி அமைப்பாளர்கள், கொடீசியா உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....