கோவை : கோவை அரசு மருத்துவமனையில் நடமாடும் ஜேப்படி திருடர்களால் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்கள் என பலரும் கதிகலங்கி நிற்கின்றனர்.

கோவை அரசு மருத்துவமனைக்குக் கோவை உட்பட நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், அதேபோல அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்படி தினமும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வரும் இந்த மருத்துவமனையில் மர்ம நபர்கள் பலர் சுற்றி திரிகின்றனர். இதில், ஜேப்படி திருடர்கள், இருசக்கர வாகனங்களை திருடுபவர்கள் என வகைவகையாக வலம் வருகின்றனர்.
இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் :-
கோவை அரசு மருத்துவமனையில் பத்மாவதி செக்யூரிட்டி கான்ட்ராக்ட் நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல, இங்கு பொதுமக்களின் நடமாட்டமும் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும். இப்படி 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இம்மருத்துவமனையில் இயல்பாக திருட்டு சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் வருகிறது. இதில், இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், மருத்துவர்களின் இருசக்கர வாகனமும் அடங்கும். இவ்வாறு காணாமல் போன வாகனங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் உரியவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதே வேதனையிலும் வேதனையாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறும்போது :- கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி எனது இருசக்கர வாகனம் மருத்துவமனையில் வைத்து தொலைந்ததாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதேபோல, மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் எனது பைக்கை திருடும் காட்சிகளும் உள்ளது. ஆனால், அந்த திருடர்களின் அடையாளங்களை வைத்தும், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. 32 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக வைத்த மனதிற்குப் பிடித்த வண்டி, பாதுகாப்பான மருத்துவமனையில் இருந்து காணாமல் போனது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. ஆகவே, காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு, எனது இரு சக்கர வாகனத்தை மீட்டுத்தர வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
இப்படி இருசக்கர வாகனங்களின் திருட்டு ஒருபுறமிருக்க ஜேப்படி கொள்ளையர்கள் குடும்பம் குடும்பமாகக் கோவை அரசு மருத்துவமனையிலேயே குடி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த ஜேப்படி கொள்ளையர்களை மருத்துவமனையில் பணிபுரியும் செக்யூரிட்டிகள் வெளியே துரத்த முற்பட்டால் அவர்களை கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டும் சம்பவமும் நடந்துள்ளது. இதனால், மருத்துவமனையின் செக்யூரிட்டிகள் தங்களின் உயிர்ப் பாதுகாப்புக்காக அவர்களைக் கண்டுகொள்வதில்லை.
இதில், குறிப்பாகக் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவை சுங்கம் பைபாஸ் சாலையை சேர்ந்த இளவரசி என்ற முதியவரின் ஆயிரம் ரூபாய் பணத்தைக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல, மருத்துவமனையின் பொதுப் பிரிவில் இருந்த மருத்துவ மாணவி ருத்ரா என்பவரின் செல்போனும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இவர்கள் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், பல சம்பவங்கள் வெளியில் தெரிவது இல்லை என்பதே நிதர்சனம்.
இது குறித்து மருத்துவமனையில் பணிபுரியும் செக்யூரிட்டி ஒருவர் கூறும்போது :- நான் இந்த மருத்துவமனையில் செக்யூரிட்டியாக ஒரு ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். இதில், அன்றிலிருந்து இன்று வரை இருசக்கர வாகன திருட்டு என்பது எளிதாக நடைபெறுகிறது. அதேபோல, ஜேப்படி திருடர்கள் அதிக அளவில் நடமாடுகின்றனர். இவர்களை நாம் வெளியே போகச் சொன்னால், இவர்கள் கத்தியைக் காண்பித்து முகத்தில் அறுத்து விடுவதாக மிரட்டுகின்றனர். நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக குறைந்த சம்பளத்தில் இங்கு பணிபுரிந்து வருகிறோம். இதற்காக எங்களின் உயிரைக் கொடுக்க முடியாது. ஆகவே, காவல்துறையினர் தான் உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும், என தெரிவித்தார்.
நோய் வாய்ப்பட்ட ஏழை, எளிய மக்கள் பல மன உளைச்சல்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் இருக்கும் குறைந்தபட்ச பணமும், பொருட்களும் சமூக விரோதிகளால் கொள்ளை அடித்துச் செல்லப்படுவது வேதனையிலும் வேதனையாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே, காவல்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.