வெலிங்டன் கன்டொன்மெண்டில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் 3 நாள் அனுசரிப்பு

நீலகிரி : கார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூர் வெலிங்டன் கன்டொன்மெண்டில் வரும் 23-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : கார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூர் வெலிங்டன் கன்டொன்மெண்டில் வரும் 23-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெலிங்டன் கன்டொன்மெண்ட் முதன்மை செயல் அதிகாரி பூஜாபி பலிச்சா கூறியதாவது:- கார்கில் போர் 20-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வெலிங்டன் கன்டொன்மெண்ட் வாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளன. 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடக்கும். 23-ம் தேதி பிளாக் பிரிட்ஜிலிருந்து ஊர்வலம் நடக்கும். அதைத் தொடர்ந்து, கன்டொன்மெண்ட் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் மரம் நடும் விழா நடத்தப்படும். 25-ம் தேதி காலை 7 மணியளவில் மினி மாரத்தான் போட்டி நடக்கிறது. ஜூனியர், சீனியர் மற்றம் பெரியவர்கள் என மூன்று பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடக்கிறது. ஜூனியர் பிரிவில் 11-15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 3 கி.மீ., தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனியர் பிரிவில் 16 வயது முதல் 25 வயது வரையிலானவர்களுக்கு 4 கி. மீட்டரும், பெரியவர்களுக்கு 5 கி.மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையாக ரூ.1000, ரூ.2000 மற்றும் ரூ.3000 ரொக்க பரிசு வழங்கப்படும். மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை www.cbwellington.in என்ற இணைய தளத்தின் மூலமாகவோ, கன்டொன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் நேரிலோ பதிவு செய்யலாம். 26-ம் தேதி கார்கில் நினைவு நாளை முன்னிட்டு கன்டொன்மெண்ட் பள்ளி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....