மேட்டுப்பாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் சாலை மறியல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட சங்கர் நகர் பகுதியில் பகவான் நகரவை உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இதில், நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இதுவரை நடுநிலைப்பள்ளியாக இருந்த நிலையில், கடந்தாண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும், அதற்கான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளான கழிப்பறை, விளையாட்டு மைதானம், போதிய வகுப்பு கட்டிடங்கள், ஆய்வகங்கள் ஏதுமின்றியே செயல்பட்டு வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், பெண் குழந்தைகள் போதிய கழிப்பறை வசதி இன்றி மிகவும் அவதிப்படுவதாகக் குற்றம்சாட்டியும், உடனடியாக பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தியும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளி வளாகத்தில் முற்றுகையிட்டதுடன் சாலைமறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதனால், மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

பின்னர், இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் பேசியதாவது :- பருவம் வந்த பெண் குழந்தைகளுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால். மாதவிடாய் காலங்களில் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகளான கழிப்பறை கூட இல்லாமல் இருப்பது பெண் குழந்தைகளுக்கு மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும், என எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....