"மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக நடத்தப்படும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அம்மா IAS அகாடமி" விசாரணை கோரும் அறப்போர்‌ இயக்கம்

கோவை : ஆர்‌.எஸ்‌. புரத்தில்‌ உள்ள கோவை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக இடத்தை முறைகேடாக அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணியின்‌ தனிப்பட்ட அமைப்புக்கு வழங்கியது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்புத் துறையிடம்‌ அறப்போர்‌ இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை : ஆர்‌.எஸ்‌. புரத்தில்‌ உள்ள கோவை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக இடத்தை முறைகேடாக அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணியின்‌ தனிப்பட்ட அமைப்புக்கு வழங்கியது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்புத் துறையிடம்‌ அறப்போர்‌ இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு :

கோவை ஆர்‌.எஸ்‌. புரத்தில்‌ ராமச்சந்திரா தெருவில்‌ கோவை மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில்‌ அமைந்திருந்த வார்டு 23 சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ பழமை ஆனதால்‌, அது இடிக்கப்பட்டு புதிதாக கட்ட 2015, 2016 மற்றும் 2017 ஆண்டுகளில்‌ டெண்டர்கள்‌ கோரப்பட்டது. சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை தற்காலிகமாக மேற்கு மண்டல அலுவலகத்தின்‌ வெளியில்‌ டின்‌ ஷீட்‌ அமைக்கப்பட்டு மாற்றப்பட்டது. குறைந்தது 1.75 கோடி செலவழித்து 3 டெண்டர்கள்‌ போடப்பட்டது. அதில்,‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ மாநகராட்சி வணிக வளாகமாக கட்டும்‌ டெண்டர்கள்‌ போடப்பட்டது. கிட்டத்தட்ட 5,000 சதுரடிக்கு கட்டி முடித்த பின்‌, சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்திற்கு அதைக் கொடுக்காமல்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி மற்றும்‌ அவரது சகோதரர்‌ எஸ்‌.பி. அன்பரசன்‌ நடத்தும்‌ நல்லறம்‌ டிரஸ்டுக்கு அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்த வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி நடந்த இந்த அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமியின் துவக்க விழாவில், அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையர்‌ விஜய்‌ கார்த்திகேயன்,‌ கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்‌ மற்றும்‌ சில‌ பொது ஊழியர்கள்‌ கலந்து கொண்டனர்‌. இவை அனைத்தும்‌ இது ஒரு அரசு நடத்தும்‌ ஐ.ஏ.எஸ். அகாடமி போல்‌ தோற்றத்தை ஏற்படுத்தினர்‌. ஊடகங்களிலும்‌ இதை பற்றிய செய்தியில்‌ அரசு இதை துவங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால்‌, உண்மையில்‌ அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி நடத்தும்‌ நல்லறம்‌ டிரஸ்டின்‌ ஒரு அங்கம்‌. இதற்கும்‌, அரசுக்கும்‌ எந்த சம்பந்தமும்‌ இல்லை.



மிக முக்கியமாக ஒரு பகுதி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகமாகக் கட்டப்பட டெண்டர்‌ விடப்பட்டும்‌, அது சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடமாக இருந்தும்‌, அமைச்சரின்‌ தனிப்பட்ட டிரஸ்டுக்கு துவக்க விழா நடத்திய கோவை மாநகராட்சி அதிகாரிகள்‌ மற்றும்‌ அமைச்சர்‌ இன்று வரை சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை புது அலுவலகத்தில்‌ இயங்க விடாமல்,‌ டின்‌ ஷீட்‌ போட்ட கூரையில்‌ இயங்கச் செய்துள்ளனர். பிறப்பு மற்றும்‌ இறப்பு சான்றிதழ்கள்‌ வழங்கும்‌ மிக முக்கிய பணிகளுக்காக பொதுமக்கள்‌ அதிகம் பயன்படுத்த வேண்டிய அலுவலகத்தை இயங்க விடாமல்‌, முழு வளாகத்தையும்‌ அமைச்சரின்‌ அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு வழங்கி பொதுமக்களுக்கும்,‌ அரசுக்கும்‌ இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்‌. உள்ளாட்சித் துறை அமைச்சராக தன்‌ அதிகாரத்தை துஷ்பிரயோகம்‌ செய்து அமைச்சர்‌ இந்த வளாகத்தை முழுவதுமாக தன்‌ டிரஸ்டுக்கு கொடுத்துள்ளார்‌.

அந்த வளாகத்தில்‌ இது கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடம்‌ என்ற எந்த அத்தாட்சியும்‌ வைக்கப்படக் கூட இல்லை. தகவல்‌ பெறும்‌ உரிமை சட்டம்‌ மூலம்‌ இதைப்பற்றிய விவரங்கள்‌ கேட்ட பொழுது, விவரங்களை சட்டவிரோதமாக கோவை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அமைச்சரின்‌ டிரஸ்டுக்கு கொடுக்கப்பட்ட மன்ற தீர்மானம்‌, ஒப்பந்த விவரங்கள்‌ அனைத்தும்‌ மறைக்கப்படுகின்றன. கோவை மாநகராட்சி டெண்டர்கள்‌, ஏலம்‌ சம்பந்தப்பட்ட அனைத்தும்‌ இணையதளத்தில்‌ இருந்தும், அமைச்சரின்‌ டிரஸ்டுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக டெண்டர்கள்‌ / ஏலம்‌ விவரங்கள்‌ மட்டும்‌ இணையதளத்தில்‌ இருந்து கோவை மாநகராட்சி அலுவலர்களால்‌ மறைக்கப்பட்டுள்ளது.



இவை அனைத்தும்‌ அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும்‌ இந்த முறைகேட்டில்‌ உள்ள உள்கூட்டை நிரூபிக்கிறது. மேலும்,‌ தகவல்‌ பெறும்‌ உரிமை சட்டத்தில்‌ வார்டு 23 அலுவலகம்‌ எங்கு இயங்குகிறது என்று கேட்டதற்கு, பொது தகவல்‌ அலுவலர்‌ புதிய வளாகத்தில்‌ என்றும்,‌ மேல்முறையீடு அலுவலர்‌ பழைய அலுவலகம்‌ என்றும்‌ மாறுபட்ட தகவல்களை தந்துள்ளனர்‌. தகவல்‌ பெறும்‌ உரிமை சட்ட மனுவிற்குப் பின்‌, இந்த மாதம்‌ கோவை மாநகராட்சி அலுவலர்கள்‌ புதிய வளாகத்திற்கு சென்று 'அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி மையம்‌' என்னும்‌ பலகையின்‌ மேல்‌ ஒரு ப்ளெக்ஸ்‌ கொண்டு கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்,‌ வார்டு 23 மற்றும்‌ 24 என்று ஒட்டியுள்ளனர்‌. ஆனால்‌, சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ இன்று வரை டின்‌ ஷீட்டில்‌ மேற்கு மண்டல அலுவலகத்தில்‌ தான்‌ இயங்கி வருகிறது என்பதை விடியோ ஸ்டிங்‌ மூலமாகவும்‌ வெளிக்கொண்டு வந்துள்ளோம்‌.

எனவே, இந்த பாரபட்சம்‌, முறைகேடு மற்றும்‌ ஊழல்‌ குறித்த முகாந்திரம்‌ தெளிவாக உள்ள நிலையில்,‌ அமைச்சர்‌ வேலுமணி மற்றும்‌ பொது ஊழியர்கள்‌ மீது உடனடியாக ஊழல்‌ தடுப்பு சட்டம்‌ மற்றும்‌ பிற சட்டங்களில்‌ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள அறப்போர்‌ இயக்கம்‌ லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மனு அனுப்பியுள்ளது. மேலும்‌, அறப்போர்‌ இயக்கம்‌ இந்த புதிய சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை முதலமைச்சர்‌ அல்லது துணை முதலமைச்சர் துவக்கம்‌ செய்து, அது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்‌ என்ற பெயர்‌ பலகை வைத்து, உடனடியாக சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை அமைச்சரின்‌ அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமியிடமிருந்து மீட்டு சுகாதாரத் துறைக்கு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...