வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 கோடி வரை மோசடி : பணத்தைப் பெற்றுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை : வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை கணபதி பகுதியில் கேய்டின்ஸ் வேலைவாய்ப்பு மையம் என்ற நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது மனைவி கரிஷ்மா டேனியல் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு என விளம்பரப்படுத்தியதையடுத்து அங்கு ஏராளமான மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 2 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி காலம் தாழ்த்தி இழுத்தடிப்பு செய்துள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த பணம் செலுத்தியவர்கள் பிரின்ஸ் டேனியலை அணுகி பணத்தை திருப்பி கேட்டபோது, வெளிநாடுகளில் வேலை கிடைக்க முன்பணமாக செலுத்தி விட்டதாகவும், பணமெல்லாம் திருப்பி கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், தான் நீலகிரி மாவட்ட ரஜினிகாந்த் மன்ற இளைஞர் அணி துணை செயலாளராக இருப்பதாகவும், தனக்கு அரசியல் பலம் இருப்பதாகக் கூறி பணம் செலுத்தியவர்களை மிரட்டி உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "இதேபோன்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் நீலகிரியில் இயக்கி வந்தார். தற்போது, அதுவும் மூடப்பட்ட நிலையில், அவரும், அவரது மனைவியும் தலைமறைவாக உள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை," என தெரிவித்தனர்.

இதனிடையே, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என 300-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதாகவும், சுமார் 6 கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டிருப்பதாகக் கூறிய பாதிக்கப்பட்டவர்கள், செலுத்திய பணத்தை திரும்பக் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....