கோவை : ஆதரவற்று சுற்றித்திரியும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன், அதனை நன்கு கவனித்து வந்த நாய்களின் 'பிரியமான தோழி' கீதா ராணி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

சிறு வயதிலேயே செல்லப் பிராணிகளுக்கான காப்பகத்தை அமைக்க வேண்டும் என்ற கீதா ராணியின் ஆசை, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நினைவாகியது. மேட்டுப்பாளையம் சாலையில் "ஸ்னேஹாலயா அனிமல் ஷெல்டர்" என்ற பெயரில் ஆதரவற்ற பிராணிகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் தெருநாய்கள் மட்டுமின்றி வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட நாய்களையும் பேணி பராமரிக்கப்பட்டு வருகிறது. 64 வயதான கீதா ராணி, செல்லப் பிராணிகளிடையே அன்பு மற்றும் அரவணைப்பின் சிறந்த ஓர் உதாரணமாக திகழ்ந்து வந்தார். ஸ்னேஹாலயா அனிமல் ஷெல்டரில் மொத்தம் சுமார் 400 நாய்களை தன்னுடைய சொந்த செலவில் பராமரித்து, பாதுகாத்து வந்தார்.
இந்த நிலையில், ஆதரவற்று காயங்களுடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன், அதனை நன்கு கவனித்து வந்த நாய்களின் கீதா ராணி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இவரது இந்த சேவையைப் பாராட்டும் விதமாகக் குறும்பட இயக்குநரும், எழுத்தாளருமான டி.ஆர். விஜயானந்த், 25 நிமிடங்கள் ஓடக்கூடிய 'ஞானமலி' எனும் குறும்படத்தை எடுத்துள்ளார்.
"ஒரு நாள் மாலைப்பொழுதில் அவிநாசி சாலையில் குட்டி நாய் ஒன்று தொண்டையில் கட்டியுடன் சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து பல்வேறு பிராணிகள் காப்பகத்திற்கு தொடர்பு கொண்டேன். யாரும் உதவ முன்வரவில்லை. இந்த நாயிக்கு 5 ஆண்டுகள் இருப்பதாலும், போதிய தங்கும் இடங்கள் இல்லாததே காரணமாக இருந்தது. இந்த நிலையில், நான் கீதா ராணியை தொடர்பு கொண்டேன். அவர் அளித்த உறுதியைப் போன்று, மறுநாள் அந்த நாய் ஸ்னேஹாலயா அனிமல் ஷெல்டருக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டது," என்கிறார் கோவை முன்னாள் பத்திரிக்கையாளர் ஸ்ருதி ஆர். மல்யா