தமிழகம் முழுவதும் வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம்

கோவை : வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை : வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை, தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இந்த ஒருநாள் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவால், எதிர்காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.



"நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பிணையம் வைத்து வேலை செய்து வருகிறோம். பெரும்பாலான வேட்டை தடுப்பு காவலர்கள், யானை உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, நாங்கள் வன கண்காணிப்பாளர் போன்ற பதவிக்கு தகுதி வாய்த்துள்ளோம். ஆனால், ஆனால், தமிழக அரசு அறிமுகல் செய்துள்ள புதியமுறை எங்களுக்கு அநீதியை இழக்கும் வகையில் உள்ளது," என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். 

"சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றும் 1,119 வேட்டை தடுப்பு காவலர்களில் 144 பேர் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்," என வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் கூறினார். 



உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் அதிவிரைவு படையினர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...