பெண் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பந்தலூர் நீதிபதி சஸ்பெண்ட்

நீலகிரி : உதகையில் நீதிமன்ற பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூர் நீதிபதி செந்தில் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி : உதகையில் நீதிமன்ற பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூர் நீதிபதி செந்தில் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் செந்தில்முரளி. இவரது மனைவி காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காங்கயம் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, ஊழியர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் வேலை செய்த ஒரு பெண் ஊழியர், நீதிபதி செந்தில்முரளி தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், தாக்கியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.



புகாரின் பேரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக துறை ரீதியாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...