கோவை : கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் சந்தன மரக் கடத்தலும், கடத்தல் முயற்சிகளும் தொடர்ந்து அரங்கேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரின் பந்தய சாலையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை அடுத்து போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர், இந்த கடத்தல் முயற்சி சம்பவங்கள் குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் சந்தன மரத்தை வெட்டுவதும், கடத்த முயற்சிப்பதும் கடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதில், இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 இடங்களில் சந்தன மரக்கடத்தல் முயற்சிகள் அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள முருகன் பஞ்சாலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் இருவர், ரம்பம் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி கடத்தியுள்ளனர். இதனிடையே, நேற்று தடாகம் சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கார் ஒன்று அதிவேகமாக சென்றது. இதையடுத்து, மருதமலை சாலையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால், அந்த காரை ஓட்டி வந்த நபர்கள் வடவள்ளி அருகே நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் காரில் சோதனை செய்த போது, சந்தன மரங்கள் மற்றும் அதனை வெட்ட பயன்படுத்திய அரிவாள், கத்தி, ரம்பம் ஆகியவை இருந்தது. இந்த நிலையில், சாயிபாபாகாலனி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம் நகர் அருகே சந்தன மரங்கள் வெட்ட முயன்ற மர்ம நபர்கள், போலீசாரின் சத்தத்தைக் கேட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை நகரின் முக்கிய பகுதியான பந்தய சாலையில் சந்தனமரமானது மர்மநபர்களால் வெட்டி கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.