மழையால் அடைத்த சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த கோவை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள்; மக்கள் பாராட்டு

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பாலமானது கோவை மாநகரின் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த லங்கா கார்னர் ரயில்வே பாலத்தை கடந்து தான் அனைத்து பகுதிக்கும் செல்ல முடியும். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் கீழ் செல்கிறது.

கோவை: கோவையில் பெய்த மழையால்  ஏற்பட்ட சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பாலமானது கோவை மாநகரின் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த லங்கா கார்னர் ரயில்வே பாலத்தை கடந்து தான் அனைத்து பகுதிக்கும் செல்ல முடியும். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் கீழ் செல்கிறது.



ஆனால் மாநகரில் லேசான மழை பெய்து விட்டாலே இந்த பாலத்தின் கீழ் நீர் தேங்குவது வழக்கம். இப்படி நீர் தேங்கும் பொழுது வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதேபோல கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்சுகளுக்கும் இது பெரிய இடைஞ்சலாக ஏற்படுகிறது

இந்த நிலையில் இன்று மாலை திடீரென பெய்த மழையினால் வழக்கம் போல லங்கா கார்னர் பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. அதேபோல போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை அறிந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி, ஆகியோர் சாக்கடை அடைப்பை எடுத்து தேங்கிய நீரை வெளியேற்ற முயன்றனர்.



இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி சாக்கடையின் மேல் நின்று குச்சியால் குத்தி அடைப்பை நீக்கினார். இதையடுத்து தேங்கிய நீரானது மெல்ல மெல்ல வடிந்து சரியானது. இந்தநிலையில் இந்த போக்குவரத்து காவலரின் சீரிய முயற்சியை கண்ட பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து சென்றனர்.

வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீசாருக்கும் பொது மக்களுக்கும் அடிக்கடி சில வாக்குவாதங்கள் உருவானாலும் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பொது மக்களின் சேவைக்காக சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...