தற்காலிகமாக முடிவுக்கு வந்தது பிரிக்கால் விவகாரம் : பிரிக்கால் நிர்வாகம் - தொழிலாளர்கள் இடையே 5 வருட ஊதிய ஒப்பந்தம் கையெழுத்து

கோவை : பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்திற்கும். அதன் தொழிலாளர்களுக்கும் இடையே 5 வருட ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


கோவை : பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்திற்கும். அதன் தொழிலாளர்களுக்கும் இடையே 5 வருட ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ஆறுமுகம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- கோவை பிரிக்கால் நிறுவனத்தில் இந்த மாதம் முதல் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நலச்சங்கம் புதிதாக பொறுப்பேற்றது. இச்சங்கத்தில் சுமார் 684 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில், பிரிக்கால் தொழிலாளர்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் ரூ. 5,400 வரை ஆண்டுதோறும் ஆயிரம் வீதம் படிப்படியாக ஊதிய உயர்வு செய்து தரப்பட உள்ளது. மேலும், பஞ்சப்படியாக புள்ளி ஒன்றுக்கு ரூ. 80 விதமாக கணக்கு போடப்பட்டு, மாதம்தோறும் ரூ. 1,200 வழங்கப்பட உள்ளது. 



தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கின் போது தற்போது வழங்கி வரும் ரூ. 5,000 யை ரூ. 7,000மாக உயர்த்தி வழங்கவும், தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் அனைவரும் பயன்பெற மருத்துவ காப்பீடு செலவு தொகையை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து வழங்கப்பட உள்ளது. மேலும், அவசரகால மருத்துவ செலவுகளுக்கு ரூ. 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பணி மூப்பு பெரும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடையாக வருடத்திற்கு 15 நாட்கள் என்பதற்கு பதிலாக வருடத்திற்கு 27.5 நாட்களாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடினமான வணிக சூழலில் நிறுவனமும் முன்னேற்ற பாதையில் செல்ல தொழிலாளர்களுடனான உறவை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது, என்றார். 

இந்தப் பேட்டியின்போது கோவை மாவட்ட பிரிக்கால் நலச்சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...