கோவை : கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ் தேச இறையாண்மை என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை அவ்வமைப்பின் தலைவர் திருமொழி அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- இந்திய தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் தேசிய அரசியலை முன் வைக்கிறோம். சரியான அரசியல் மாற்றை முன் வைத்து இவ்வமைப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ் தேசிய ஒற்றுமையை சீர்குழைக்கும் தமிழின வாதத்திற்கு எதிராகவும், தமிழர்களை பிளவு படுத்தும் சாதிய, மதவாததிற்கு எதிராகவும் போராட உள்ளேன். தமிழக அரசு இறையாண்மை கொண்ட அரசாக இருக்க வேண்டும். இந்த இயக்கம் அரசியல் சக்தியாக எழுச்சி பெறும். தமிழர்கள் ஒற்றுமை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சாதிய மோதல்களை சிலர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். தமிழ் தேசிய இறையாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த அமைப்பின் செயல்பாடுகள் இருக்கும். தற்போது 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். விரைவில் அனைத்து மாவட்டங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும், என்றார்.