கோவை அரசு மருத்துவமனையின் முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



நேற்று முன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், இந்த போஸ்டரில் தமிழக அரசின் சுகாதாரத் துறையே மருத்துவமனை முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடு என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, மருத்துவக் கல்லூரியில் உணவு விடுதியில் நடக்கும் ஊழல்கள் மீது நீதி விசாரணை நடத்து எனவும், மருத்துவமனையின் முதல்வர் ஊழியர்களிடம் சாதி ஆணவத்தோடு நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 



இந்த நிலையில், போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருந்த பொழுது ரோந்து பணியில் வந்த போலீசார், அனுமதி இன்றி ஒட்டியதாக போஸ்டர்களை பறிமுதல் செய்தும், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளையும், பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், கட்சியின் தெற்கு சட்ட மன்ற நிர்வாகி பாலசிங்கத்தின் மீது போலீசார் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...