கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எனக் கூறி கேரள வியாபாரியிடம் ரூ. 13 லட்சம் வழிப்பறி : கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை : சிவானந்தா காலனி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் எனக் கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : சிவானந்தா காலனி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் எனக் கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்க நகை வியாபாரிகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் வலம் வருகிறது. மேலும், இந்த கும்பல்கள் பாலக்காடு சாலையை மையமாக வைத்து, தனது குற்ற சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில், தற்போது மாநகருக்குள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் நண்பரான விக்னேஷ், கிராமுக்கு 200 ரூபாய் குறைவாக தங்கம் வாங்கி தருவதாக கோவைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் உக்கடத்தில் இருந்து ஆட்டோ மூலம் சிவானந்தா காலனிக்கு வந்தனர். இந்த நிலையில், சிவானந்தா காலனியில் சிவா என்பவரை சந்தித்தபோது, அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இன்னோவா காரை காண்பித்து, அதில் வியாபாரிகள் இருக்கிறார்கள் உள்ளே அமர்ந்து பேசிக்கொள்ளவும் என்றுள்ளார். அப்போது, இவர்கள் காருக்குள் சென்ற போது உள்ளே இருந்து நபர்கள் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பணத்தை தரும்படி கேட்டுக் கொண்டனர். அதில், ஒருவர் காவல்துறையினரின் சீருடையில் இருந்ததால், அதனை நம்பிய நவ்சாத், தனது கையிலிருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, விசாரிப்பது போல காரில் சுற்றி திரிந்த அந்த கும்பல் திடீரென இருவரையும் காரிலிருந்து வெளியே அப்புறப்படுத்தி விட்டு தப்பி ஓடினர்.

இந்த நிலையில், அதிர்ச்சியடைந்த நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் சிவானந்தா காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...