திருப்பூரில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (50). இவர் வடுகபாளையம் சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலாட்சி அவிநாசியை அடுத்து ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில், வீட்டின் மாடியில் குழாய் அடைத்திருப்பதை சுத்தம் செய்து கொண்டிருந்த லோகநாதன், முதல் மாடியிலிருந்து குப்பையை கீழே கொட்ட முயற்சித்துள்ளார். அப்போது, நிலை தடுமாரி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் லோகநாதன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, லோகநாதன் மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சி.சி.டி.வி. ஆதாரங்களை கொன்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...