கோவையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை தாயுடன் சேர்த்து கைது செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நீதிமன்றத்திற்குள் சென்று கொண்டிருந்த தாயும், மகனையும் போலீசார் வழிமறித்து கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: போத்தனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் நீதிமன்றம் முன்பு வைத்து கைது செய்ய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கோணவாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தான முத்து. இவர் மீது ஏற்கனவே பல கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போத்தனூர் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், போலீசார் கைரேகை மூலம் சந்தானம் முத்துதான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என உறுதிப்படுத்தி தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றொரு குற்றவாளியின் உதவியுடன் சந்தான முத்துவை நீதிமன்றம் அருகே வரவழைத்தனர். 



இந்த நிலையில், நீதிமன்றம் அருகே தனது தாயுடன் வந்த சந்தானம் முத்துவை மறைந்திருந்த போலீசார் திடீரென சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டனர். இதையடுத்து, சந்தானம் முத்துவின் தாயார் அவரை கைது செய்ய கூடாது என சாலையில் அமர்ந்தார். பின்னர், போலீசார் இருவரையும் வாகனத்தில் ஏறும்படி இழுத்தனர். 



ஆனால், அவர்கள் இருவரும் போலீசாருடன் வர மறுத்து கதறி அழுதனர். இதையடுத்து, அருகே இருந்த வழக்கறிஞர்கள் பெண் நபரை இழுக்கக் கூடாது எனவும், நீதிமன்றத்திற்குள் வருபவர்களை இப்படி தடுத்து நிறுத்தி கைது செய்யக்கூடாது எனவும் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இவர்கள் அங்கிருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 7-க்கு தப்பிச் சென்றனர். கோவையில் நீதிமன்றம் முன்பு போலீசார் தாய் மகனை இழுத்து கைது செய்ய முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...