அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட கோவை இளைஞர்கள் கைது

கோவை : அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்கா தூதரகம் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை : அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்கா தூதரகம் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபகாலமாகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இந்த மோசடி கும்பல்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் பணம், பொருள், படிப்பு, நிம்மதி ஆகியவற்றை இழந்துள்ளனர். இவ்வாறு அதிகரித்து வரும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை சார்பில் விழிப்புணர்வுகள் செய்தாலும், இன்னும் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து தான் வருகின்றனர். இந்த செயல்பாடுகளால் அரசுத் துறையும், வெளிநாடு செல்பவர்களின் ஆவணங்களை தீவிரமாக கண்காணிக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை அமெரிக்க தூதரகத்தில் இருந்து கோவை மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் மனு ஒன்று வந்துள்ளது. அதில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அருண் என்கிற அருண்குமார், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அசோக், இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த நிவாஸ் ஆகியோர் ‘ஸ்மார்ட் டாட் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் நிறுவனம் நடத்தி போலி ஆவணங்களை தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அமெரிக்க தூதரகத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே, இந்த மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் யார் யாரை ஏமாற்றியுள்ளனர், எப்படி ஏமாற்றியுள்ளனர், இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...