அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள் மனு

கோவை : தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை : தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். 

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது, வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள், தெரு விளக்கு, சீரான குடிநீர் விநியோகம் மற்றும் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அப்படை வசதிகளை வலியுறுத்தி மனு அளித்தனர். 

"கடந்த 6 மாதங்களாக குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டில் குடிநீர் விநியோகம் பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே, நாள்தோறும் அடிப்படையில் குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்கிறார் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி.



மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, சாக்கடை வசதிகள் ஏதும இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...