மறுநிலஅளவைப் பணி அறிவிப்பை பெற்றுக் கொண்ட நிலஉரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபணை மனு அளிக்கலாம் : கோவை மாவட்ட நிர்வாகம்

கோவை : மறுநிலஅளவைப் பணிகளில் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பும் நில உரிமையாளர்கள், அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபணை மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : மறுநிலஅளவைப் பணிகளில் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பும் நில உரிமையாளர்கள், அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபணை மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசாணை (நிலை) எண்‌.733 வருவாய்த்துறை நாள்‌:14.11.20006-ன்படி, தமிழ்நாடு முழுவதும்‌ நவீன நிலஅளவை கருவிகளான ஜி.பி.எஸ். மற்றும் மொத்த நிலையம் மூலம் மறுநிலஅளவை மேற்கொள்ள அரசால்‌ உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணையின்படி, கோவை‌ மாவட்டம்‌, கவுண்டம்பாளையம்‌ மூன்றாம்‌ நிலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ நவீன தொழில்நுட்ப கருவிகள்‌ மூலம்‌ மறுநிலஅளவைப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு, நிலஉரிமையாளர்களுக்கு அவர்களது அனுபவத்தில்‌ உள்ள நிலத்தின்‌ புல எண்‌/பரப்பு விபரங்களுடன்‌ தமிழ்நாடு நிலஅளவை எல்லைச்‌ சட்டம்‌ பிரிவு 9(2)-ன்படி அறிவிப்பு சார்வு செய்யப்படும்‌ பணி நிலஅளவை மற்றும்‌ பதிவேடுகள்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

9(2) அறிவிப்பு தொடர்பாக ஏதேனும்‌ ஆட்சேபணை இருக்கும்பட்சத்தில்‌, 9(2) அறிவிப்பு பெற்றுக்‌ கொண்ட 30 நாட்களுக்குள்‌ சம்பந்தபட்ட நிலஉரிமையாளர்கள்‌, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்‌ அமைந்துள்ள நிலஅளவைப்‌ பதிவேடுகள்‌ துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும்‌, பெயர்‌ பதிவுகள்‌ தொடர்பாக ஆட்சேபணை ஏதுமிருப்பின்‌ நகர நிலவரித்திட்ட தனிவட்டாட்சியரிடமும்‌ மேல்முறையீடு செய்து கொள்ளவும்‌ தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள்‌ தமிழ்நாடு அரசின்‌ இத்திட்டப்‌ பணியின்‌ மூலம்‌ தங்களது நிலஉரிமைக்கான 9(2) அறிவிப்புகள்‌ பெற்றுக்‌ கொள்வதுடன்,‌ அதில்‌ ஏதேனும்‌ ஆட்சேபனையிருப்பின்‌ அவற்றை சட்டப்பூர்வமாக தீர்வு காணும் வகையில்‌ மனு அளித்து இந்த வாய்ப்புகள்‌ மூலமாக முழுமையாக பயன்‌பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...