நீலகிரியில் விபத்தில்லா தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தி்ல்லா தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தில்லா தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அதிக மலை பாதைகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட மாவட்டமாகும். மேலும், சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் கூடலூர், உதகை மலைப்பாதை வழியாக தான் உதகைக்கு வருவதால், அவர்களுக்கு மலைப்பாதையில் எவ்வாறு வாகனம் இயக்க வேண்டும் என்பது அவ்வளவாக தெரிவதில்லை. இதனால், விபத்தில் வாகனங்கள் சிக்கி உயிர்கள் பலியாகுவதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. 



இதனைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் அனைத்து சாலைகளிலும், வைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, இந்தாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.



இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீலகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில், இன்று விபத்தில்லா நாளாக அனுசரிக்க முடிவு செய்து, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. கேத்தி காவல் ஆய்வாளர் டி.ஜெய்குமார் தலைமையில் சிறப்பு துணை ஆய்வாளர் ரத்தினம் உள்ளிட்ட காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...