பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 4 தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்

கோவை : பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டமன்ற துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு சட்டமன்ற துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார். 

சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது அவர் பேசியதாவது :- பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பெய்கின்ற மழைநீர் மேற்கு நோக்கி ஓடுகின்ற தண்ணீர் பாதையைப் பெற்றிருக்கிற பீடபூமி, மேடு பள்ளமான பகுதி. இந்தப் பகுதியில் வால்பாறை தொகுதியில் வரையாறு, உப்பாறு, பொள்ளாச்சியில் கோதையாறு, குள்ளி செட்டிப்பாளையம் ஆறு, செல்லப்பம்பாளையம் ஆறு, கிணத்துக்கடவில் வரட்டாறு, பாலாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. புலிப்பாறை அணை என்கின்ற ஒரு சிறு திட்டம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கப்பட்டு, நின்று இருக்கிறது. இப்படிப்பட்ட ஆறுகளோடு பாப்பாத்தி பள்ளம், புங்கன்கடவுப் பள்ளம், பாவரைப் பள்ளம், கொளத்துப் பள்ளம், தூனக்கடவு பள்ளம், வாகரையாறு பள்ளம், மைலம்பாறைப் பள்ளம் போன்றப் பள்ளப் பகுதிகளிலும் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி, பெய்கின்ற மழை நீரில், ஒரு சொட்டு நீர்கூட கேரள மாநிலத்திற்குச் சென்று, அரபிக் கடலில் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சென்ற ஆண்டு மட்டும், பரம்பிக்குளம் அணை, சோலையாறு அணை, ஆழியாறு அணைப் பகுதிகளில் பெய்த மழையில் 50 ஜி.வி.சி. நீர் வீணாகச் சென்று அரபிக் கடலில் கலந்திருக்கிறது. இதனைத் தடுக்கின்ற வகையில், இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளிலேயும், சிறு சிறு பள்ளங்களிலேயும், எங்கெங்கெல்லாம் தடுப்பணைகள் தேவையோ, அங்கங்கெல்லாம் தடுப்பணைகளைக் கட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் நிலுவையில் இருக்கிற ஆனமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்மட்டக் குழுவை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதற்காக, அவர்களுக்கு எங்களுடைய 4 இலட்சம் ஏக்கர் பாசன விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும் ஆண்டில், கேரள மாநில அரசாங்கத்தோடு பேசி, ஆனமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டும். அதேபோல, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் அமைவதற்குக் காரணமாக இருந்த வி.கே. பழனிசாமி கவுண்டருக்கு நினைவு இல்லம் அமைக்க முதலமைச்சர் ஆணை வழங்கியிருக்கிறார். அந்த நினைவு இல்லத்தை வேட்டைக்காரன்புதூர் பரம்பிக்குளம்-ஆழியாறு செயற் பொறியாளர் அலுவலகத்தில் அமைத்துக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மழை நீர் மக்களின் உயிர் நீர். எனவே, அந்த மழை நீர் மேற்கு நோக்கி ஓடி, அரபிக் கடலில் வீணாகக் கலக்காமல், பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதி பாசன விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, வேளாளப் பெருங்குடி மக்கள் பயன்பெறத் தக்க வகையில் தேவையான இடங்களில், சிறப்புக் கவனம் செலுத்தி, சிறு சிறு தடுப்பணைகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

அதேபோல், கேரளாவிற்குச் செல்கிற ஆழியாறிலே, தேவையான இடங்களில் சிறு, சிறு தடுப்பணைகளைக் கட்டினால், 2 ஜி.வி.சி. அளவிற்குத் தண்ணீரைத் தேக்கி, கேரள மாநிலத்திற்குத் தேவையானபோது, விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே, ஆழியாறிலும், மணக்கடவிலே தொடங்கி ஆழியாறு அணை வரை - அந்த ஆறு ஒரு வற்றாத ஆறு. எப்பொழுதும் வற்றாத ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த ஆற்றின் குறுக்கே, ஆங்காங்கே தடுப்பணை கட்டி மழை நீரைச் சேகரித்து, முதலமைச்சரின் காலத்திலே கொங்கு மண்டல விவசாயிகளுக்கு ஒரு பொற்காலமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறினார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...