பி.எஸ்.ஜி.யில் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் : த.பெ.தி.க.வினர் முற்றுகை

கோவை : புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



புதிய கல்வி கொள்கை குறித்து மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் ஏற்கப்பட்டு, புதிய கல்வி கொள்கையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்ய திட்டம். அந்த வகையில், புதிய கல்வி கொள்கை குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மண்டல அளவிலான பணிமனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். 



இந்த நிலையில், இக்கல்வி கொள்கை குறித்து சாதகமாக பேசுபவர்களை மட்டும் அழைத்து இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி, பி.எஸ்.ஜி. கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...