திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 60 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் நிறைவேற்றவில்லை என்றும், தார்சாலைகள் இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், சாக்கடைகளில் ஏற்படும் கழிவுகளால் தொற்றுநோய் உண்டாகி வருவதாகக் கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல், வீடுகளுக்கான வரியை மட்டும் பலமடங்கு உயர்த்தி உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.