வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் 'பாடி ஒன் கேமராக்கள்' கோவையில் அறிமுகம்

கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் போலீஸார் நடத்தும் பேச்சுக்கள் மற்றும் அபராதங்கள் தொடர்பான விவரங்களை நேரடியாக பதிவு செய்யும் 'பாடி ஒன் கேமராக்கள்' வழங்கும் நிகழ்வை மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்தார்.


கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் போலீஸார் நடத்தும் பேச்சுக்கள் மற்றும் அபராதங்கள் தொடர்பான விவரங்களை நேரடியாக பதிவு செய்யும் 'பாடி ஒன் கேமராக்கள்' (Body Worn Camera) வழங்கும் நிகழ்வை மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்தார்.



போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனை செய்வது வழக்கம். இப்படி வாகன சோதனைகள் செய்யும் பொழுது போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இந்த வாக்குவாதங்கள் கடைசியில் விவாதப் பொருளாக மாறுகிறது. ஆகவே, இந்த விவகாரத்தை தடுக்கும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினரின் நடவடிக்கையையும், வாகன ஓட்டியின் நடவடிக்கையையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் 'பாடி ஒன் கேமராக்கள்' என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறிய அளவில் உள்ள இந்த கேமராவின் உதவியுடன் வாகன ஓட்டிகள் செய்யும் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை அறிய முடியும். 



இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயிர் அமைப்பின் உதவியுடன் 70 போக்குவரத்து போலீசாருக்கு 'பாடி ஒன் கேமராக்கள்' இன்று வழங்கப்பட்டன. இந்த கேமராக்களை சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும் போதும், போக்குவரத்தைச் சீர்படுத்தும்போதும் கண்டிப்பாக உடலில் பொருத்திக்கொள்ள வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த கேமராக்கள் வழங்கும் நிகழ்வை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் துவங்கி வைத்தார். 



இந்த நிகழ்வில் உயிர் அமைப்பின் நிர்வாகி ராஜசேகரன், துணை ஆணையாளர்கள் பெருமாள், பாலாஜி சரவணன், போக்குவரத்து உதவி ஆணையாளர் ராஜ் கண்ணா, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெற்றிச்செல்வன் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...