'ஒரே நாடு ஒரே ரசீது' என்ற திட்டத்தின் அடிப்படையில் அதிநவீன இ-சலான் கருவி : கோவை மாநகர போலீசாருக்கு 32 கருவிகள் ஒதுக்கீடு

கோவை : நம் நாட்டில் எந்த மூலையிலும் போக்குவரத்து விதியை மீறியிருந்தாலும், அவற்றைப் பதிவு செய்யும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட அதிநவீன இ-சலான் ஆண்ட்ராய்டு கருவி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

கோவை : நம் நாட்டில் எந்த மூலையிலும் போக்குவரத்து விதியை மீறியிருந்தாலும், அவற்றைப் பதிவு செய்யும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட அதிநவீன இ-சலான் ஆண்ட்ராய்டு கருவி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகிறது. இதனால், சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அபராதங்களை விதித்தாலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் சாலை விதிகளை மீறுபவர்களை வரையறைக்கு உட்படுத்த நாடு முழுவதும் ஒரே சலான் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான நவீன சாதனங்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இ-சலான் கருவி வாயிலாக மின்னணு ரசீது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பொருத்திய புதிய இ-சலான் கருவி வந்துள்ளது. இது தற்போது இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. இதில், வாகன ஓட்டிகளின் புகைப்படம், ஓட்டுநர் உரிமம், உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தால் அதுவும் பதிவேற்றப்பட்டிருக்கும். இதன் மூலம், வாகன ஓட்டிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மின்னணு ரசீது அச்சிட்டு அவர்களிடம் தரப்படும். வாகன ஓட்டிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் உடனடியாக அபராத தொகையைக் கட்டலாம் அல்லது அஞ்சலகம் மற்றும் இ-சேவை மையத்திலும், பே-டி.எம் மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகருக்கு 32 அதிநவீன இ-சலான் கருவிகள் :

நாடு முழுவதும் அமல்படுத்த தயாராக இருக்கும் அதிநவீன இ-சலான் கருவி திட்டத்திற்காக கோவை மாநகர காவல்துறைக்கு 32 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கும், 15 போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும், 15 சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த கருவியின் மென்பொருள் ஏற்றம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கோவை மாநகர காவலர்களுக்கு இந்த கருவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....