கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சப்பணம் புழங்குவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சார் பதிவாளர் அம்சவேணி மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் கூறும்பொழுது :- சோதனையைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த பொறுப்பு சார்பதிவாளர் அம்சவேணி (43), உதவியாளர் லோகத்தாள் (50), இளநிலை உதவியாளர் வெங்கடேஸ்வரி (38), உதவியாளர் சாமுண்டீஸ்வரி (50), அலுவலக உதவியாளர் தியாகராஜன் (38), ஆகியோர் மீது அரசு ஊழியர் கணக்கில் வராத பணம் வைத்திருந்தது தொடர்பாக 41 prevention act, 41 read with 102 of crpc ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும், என தெரிவித்தனர்.