வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி : கோவையைச் சேர்ந்த கணவன், மனைவி கைது

கோவை : சரவணம்பட்டி அருகே வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை : சரவணம்பட்டி அருகே வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை மாவட்டம் இடையர்பாளையம்‌ அன்பு நகரில்‌ வசிப்பவர்‌ சுப்ரமணியம்.‌ இவரது மகன்‌ சந்தோஷ்‌ என்பவர்‌ டிப்ளமோ என்ஜினியரிங்‌ படித்து முடித்து விட்டு, வெளிநாட்டில்‌ வேலைக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக கோவை சரவணம்பட்டியை அடுத்த எல்‌.ஜி. பஸ்‌ ஸ்டாப்‌ அருகில்‌ ஸ்ரீவசந்தி என்டர்பிரைசஸ்‌ என்ற பெயரில்‌ வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும்‌ நிறுவனம்‌ நடத்தி வந்த வசந்தி (38) மற்றும் அவரது கணவர்‌ சந்தோஷ் ஆகியோர்களை அணுகினார். அப்போது, தாங்கள்‌ பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட நபர்களை பல வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி உள்ளதாகவும்‌, அவரின்‌ படிப்பிற்கு ஏற்ற வேலை ஆஸ்திரேலியா நாட்டில்‌ உள்ளதாகவும்‌ கூறிய அவர்கள், இதற்கு ரூ. 6 லட்சம்‌ செலவு ஆகும்‌ என தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, பணத்தைப் பெற்றுக் கொண்டு டூரிஸ்ட்‌ விசா கொடுத்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி இந்தோனேசியா நாட்டிற்கு அனுப்பி, அங்கு தங்க வைத்துள்ளனர். பின்னர், சந்தோஷின்‌ தகப்பனாரிடம்‌ மீண்டும்‌ ரூ. 3 லட்சம்‌ பணம்‌ பெற்று உரிய வேலைக்கான விசா பெற்றுத்‌ தராததால்‌ சந்தோஷ்‌ திரும்ப இந்தியா வந்துள்ளார்‌. பின்னர் தான்‌ ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ்‌ மாநகர குற்றப்பிரிவில்‌ புகார்‌ அளித்ததின்‌ பேரில்,‌ கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில்‌ வசந்தியும்‌, அவரது கணவர்‌ சந்தோசும்‌ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் தலா 3 ரூ. லட்சம்‌ முதல்‌ 6 ரூ. லட்சம்‌ வரை மொத்தமாக ரூ..40 லட்சத்திற்கு மேல்‌ பணம்‌ பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்சரணின்‌ உத்தரவுப்படி, காவல்‌ துணை ஆணையர்‌ பெருமாளின்‌ மேற்பார்வையில்‌. உதவி ஆணையர்‌ சந்திரசேகரனின் தலைமையில்‌, காவல்‌ ஆய்வாளர்‌ நாகராஜன்‌, உதவி ஆய்வாளர்‌ ஜமுனா மற்றும்‌ போலீஸார்‌ நேற்று கோவை கணபதி மாநகரில்‌ வசித்து வரும்‌ வசந்தியையும்‌, அவரது கணவர் சந்தோஷ்‌ ஆகியோரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....