உக்கடம் அருகே உள்ள ஜி.எம். நகர் பகுதி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை : வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.


கோவை : வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. 



கோவை மாநகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் மின்வாரியத் துறையினரின் உதவியுடன் உக்கடம் வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்டன. வாலங்குளத்தை ஆக்கிரமித்து சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு 275 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதனை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் இன்று அகற்றினர். ஜி.எம். நகர், மஜித் காலனி மற்றும் வாலாங்குளம் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்களுக்கு புல்லுக்காடு பகுதியில் 1,840 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



"பயனாளிகளுக்கு ஏற்கனவே புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு, புதிய வீடுகளுக்கு மாறிவிட்டனர். ஒருசிலர் மட்டுமே வெளியேறாமல் இருந்து வருகின்றனர். அவர்களை வெளியேற்றி விட்டு, ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன," என்கிறார் கோவை மாநகராட்சி மூத்த அதிகாரி.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...