கோவையில் நெஞ்சுவலியால் துடித்த மாற்றுத்திறனாளியின் உயிரைக் காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்த போது மாரடைப்பால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்த போது மாரடைப்பால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 

கடந்த 09-ம்‌ தேதி கோவை மாநகர சி2 பந்தயசாலை காவல்நிலைய முதல்நிலைக்‌ காவலர்‌ பேபி என்பவர்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌ முன்பு பணியிலிருந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம்‌ மனு கொடுத்துவிட்டு வெளியில்‌ வந்த சுமார்‌ 50 வயது மதிக்கத்தக்க ஊனமுற்ற நபர்‌ ஒருவர்‌ திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால்‌ துடித்துக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட பெண்‌ காவலர்‌ பேபி, தனது சமயோஜித அறிவால்‌ உடனே அவருக்கு முதலுதவி செய்து, அந்த வழியாக வந்த ஆட்டோவில்‌ பாதிக்கப்பட்ட நபரை ஏற்றி, ஆட்டோ கட்டணமும்‌ கொடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில்‌ சேர்த்து உயிரை காப்பாற்றியுள்ளார்‌.

முதல்நிலைக்‌ காவலர்‌ பேபியின் மனிதாபிமான இச்செயலை பொதுமக்கள்‌ வெகுவாக பாராட்டினர்‌. மேலும், காவலர் பேபியின்‌ இச்செயலை கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண் பாராட்டி சான்றிதழ்‌ வழங்கியதுடன்‌, வாழ்த்துக்களையும்‌ தெரிவித்தார்‌.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...