கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்த போது மாரடைப்பால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

கடந்த 09-ம் தேதி கோவை மாநகர சி2 பந்தயசாலை காவல்நிலைய முதல்நிலைக் காவலர் பேபி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பணியிலிருந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஊனமுற்ற நபர் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட பெண் காவலர் பேபி, தனது சமயோஜித அறிவால் உடனே அவருக்கு முதலுதவி செய்து, அந்த வழியாக வந்த ஆட்டோவில் பாதிக்கப்பட்ட நபரை ஏற்றி, ஆட்டோ கட்டணமும் கொடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
முதல்நிலைக் காவலர் பேபியின் மனிதாபிமான இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும், காவலர் பேபியின் இச்செயலை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பாராட்டி சான்றிதழ் வழங்கியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.