திருப்பூரில் பல லட்சம் மோசடி செய்ததாக செந்தில் நகர் உரிமையாளர் மீது பொதுமக்கள் புகார்

திருப்பூர் : திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் நிறுவனத்தார் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் நிறுவனத்தார் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 



திருப்பூர் - பல்லடம் சாலை அறிவொளி நகர் பகுதியில், செந்தில் நகர் என்ற ப்ரமோட்டார்ஸ் சார்பில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, வீட்டு மனைகள் அப்பகுதியில் துவங்கப்பட்டது. தற்போது 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ரூ. 5 லட்சம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான வீடுகளை வாங்கியுள்ளனர். இதனிடையே, வீட்டுமனைகள் வாங்கும்போது ஆசைவார்த்தை கூறிய நிறுவனத்தார், கடந்த நான்கு வருடங்களாக குடிநீர், சாலை, மின்விளக்கு என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் செந்தில்நகர் ப்ரமோட்டார்ஸ் ஏமாற்றி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

மேலும், முழு தொகையும் செலுத்திய பொதுமக்களுக்கு வீட்டு மனைகளை வழங்காமல், வருடக் கணக்கில் இழுத்தடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே மாவட்ட .நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு, பணம் செலுத்திய பொதுமக்கள் அனைவருக்கும், வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50-க்கும்.மேற்பட்டோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...