மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கண் திறப்பு நிகழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் துவங்கி 15 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு 17 வகையான அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



இதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள குண்டம் குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 20 அடி நீளம் 10 அடி ஆழமுள்ள குண்டத்தை பல வண்ண மலர்களைக் கொண்டு பக்தர்கள் அலங்கரித்து இருந்தனர். இதற்கு அர்ச்சகர்கள் இன்று சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி குண்டம் கண் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர். இன்று முதல் துவங்கிய இந்த திருவிழாவின் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 30 ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...