சாதாரண கட்டண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண போக்குவரத்துத் துறை நடவடிக்கை

கோவை : பொதுமக்களின் வசதிக்காக சாதாரண கட்டணப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ கோவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : பொதுமக்களின் வசதிக்காக சாதாரண கட்டணப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ கோவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த ஆண்டு கட்டண உயர்விற்கு பிறகு நகரப்‌ பேருந்துகள்‌ சாதாரணம்‌ மற்றும்‌ தாழ்தள சொகுசுப்‌ பேருந்துகள்‌ (எஸ்‌.எல்‌.எப்‌) என்ற இருவகை பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதில்,‌ தாழ்தள சொகுசுப்‌ பேருந்துகளை தவிர்த்து சாதாரண கட்டணப்‌ பேருந்துகளை பொதுமக்கள்‌ அடையாளம்‌ காண்பதில்‌ மிகுந்த குழப்பம்‌ ஏற்பட்டது. இந்த நிலையில்‌, சாதாரணக்‌ கட்டணப்‌ பேருந்துகளை பொதுமக்கள்‌ எளிதில்‌ அறியும்‌ வண்ணம்‌, கடந்த ஜுலை 01-ம் தேதி முதல்‌ தாழ்தள சொகுசுப்‌ பேருந்துகள்‌ நீங்கலாக, அனைத்து சாதாரணப்‌ பேருந்துகளிலும்‌ "சாதாரண கட்டணம்‌ குறைந்தபட்ச கட்டணம்‌ ரூ. 5" என ஸ்டிக்கர்‌ வில்லைகள்‌ பேருந்தின்‌ முன்புற முகப்புக்‌ கண்ணாடி மற்றும்‌ பின்புற கண்ணாடிகளில்‌ ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்டிக்கர்‌ ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதால்‌ இப்பேருந்துகளில்‌ பயணிகள்‌ கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...