கோவை : துடியலூர் பன்னிமடை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமி ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் அமுதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 376 மனுக்களை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் துடியலூர் பன்னிமடை அருகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.