பன்னிமடையில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

கோவை : துடியலூர்‌ பன்னிமடை அருகே பாலியல்‌ வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமி ரிதன்யாவின்‌ குடும்பத்தினருக்கு முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்‌.

கோவை : துடியலூர்‌ பன்னிமடை அருகே பாலியல்‌ வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமி ரிதன்யாவின்‌ குடும்பத்தினருக்கு முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்‌.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் அமுதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 376 மனுக்களை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில்‌ துடியலூர்‌ பன்னிமடை அருகில்‌ பாலியல்‌ வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்‌. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...