ராமகிருஷ்ணாபுரம் வாரச்சந்தையால் போக்குவரத்து நெருக்கடி : சந்தையை இடமாற்றம் செய்யக்கோரி மனு

கோவை : கணபதியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே அதனை ஆய்வு செய்து அகற்றிட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.


கோவை : கணபதியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே அதனை ஆய்வு செய்து அகற்றிட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. 



கோவை - சத்தி சாலையில் உள்ள கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வார சந்தையில் புத்தர் வீதி, சாரதாதேவி வீதி, விவேகானந்தர் வீதி போன்ற 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் சாலையை மறித்து, வாகனங்களை நிறுத்துவதால் அங்கு வசிப்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இதனை ஆய்வு செய்து சந்தை கடைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் கூறி அப்பகுதி நலசங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், "350-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலை ஓரங்களிலும் கடை அமைப்பதால் சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இங்கு வாரச்சந்தை கடை போடுபவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், இயற்கை உபாதைகள் கழித்தும் மீதமாகும் காய்கறிகளை சாக்கடையில் கொட்டியும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகின்றனர். மாநகராட்சி அனுமதி இல்லாமல் இங்கு பலர் கடை நடத்துகின்றனர். அதில் ஒரு சிலர் சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்து வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இதனை ஆய்வு செய்து சந்தை கடையை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்," என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...