கோவையில் ஆதரவின்றி திரிந்த இளம்பெண்ணை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி திருந்த இளம்பெண்ணை மீட்டு, அவரது பாட்டியிடம் பந்தயசாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி திரிந்த இளம்பெண்ணை மீட்டு, அவரது பாட்டியிடம் பந்தயசாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 11-ம் தேதி கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ பாதுகாப்பு பணியில்‌ இருந்த பாதுகாவலர்‌ சுடலைகுட்டி ‌என்பவர்‌ பாதுகாப்பின்றி மருத்துவமனையில்‌ கற்றித்திரிந்த இளம்பெண் நந்தினி (18) என்பவரை பிடித்து கோவை மாநகர பந்தயசாலை காவல்‌ நிலையத்தில்‌ ஒப்படைத்தார்‌. காவல்‌ ஆணையரின்‌ உத்தரவின்‌ பேரில், ‌நந்தினியின்‌ பெயர்‌ மற்றும்‌ முகவரியை வைத்து காவல்துறை நவீன சி.சி.டி.என்.எஸ். கம்ப்யூட்டர்‌ பதிவேடுகளில்‌ தேடிய போது, பெண்‌ சேலம்‌ மாநகரம்‌, கன்னங்குறிச்சி காவல்‌நிலையத்தில்‌ காணாமல்‌ போனதாக, தாய்‌ அன்பு இல்லத்தில்‌ தங்கியிருக்கும்‌ அவரது பாட்டி புகார்‌ கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.‌

பின்னர், பந்தயசாலை காவல்‌ ஆளினர்கள்‌ விரைவாக செயல்பட்டு நந்தினியை அவரது பாட்டியின்‌ வசம்‌ ஒப்படைத்தனர்‌. தகுந்த நேரத்தில்‌ சிறுமி நந்தினிக்கு உதவி அவரது குடும்பத்தினரிடம்‌ சேர்க்க உதவிய பாதுகாவலர்‌ சுடலைகுட்டியை கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண் மனதார பாராட்டி சான்றிதழ் ‌வழங்கி சிறப்பித்தார்‌. 

Newsletter

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...