கோவை : கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி திருந்த இளம்பெண்ணை மீட்டு, அவரது பாட்டியிடம் பந்தயசாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி திரிந்த இளம்பெண்ணை மீட்டு, அவரது பாட்டியிடம் பந்தயசாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 11-ம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் சுடலைகுட்டி என்பவர் பாதுகாப்பின்றி மருத்துவமனையில் கற்றித்திரிந்த இளம்பெண் நந்தினி (18) என்பவரை பிடித்து கோவை மாநகர பந்தயசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், நந்தினியின் பெயர் மற்றும் முகவரியை வைத்து காவல்துறை நவீன சி.சி.டி.என்.எஸ். கம்ப்யூட்டர் பதிவேடுகளில் தேடிய போது, பெண் சேலம் மாநகரம், கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் காணாமல் போனதாக, தாய் அன்பு இல்லத்தில் தங்கியிருக்கும் அவரது பாட்டி புகார் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
பின்னர், பந்தயசாலை காவல் ஆளினர்கள் விரைவாக செயல்பட்டு நந்தினியை அவரது பாட்டியின் வசம் ஒப்படைத்தனர். தகுந்த நேரத்தில் சிறுமி நந்தினிக்கு உதவி அவரது குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய பாதுகாவலர் சுடலைகுட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மனதார பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.