கோவை : மேட்டுப்பாளையம் அருகே மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் பிளாக்தாண்டர் முன்பு இருந்து துவங்கிய இந்த மினி மாராத்தான் போட்டியினை கவிஞர் கவிதாசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உதகை சாலையில் துவங்கிய இந்த பேரணியானது, சுமார் 4 கிலோ மீட்டர் வரை தொடர்ந்து கல்லாரில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இந்த மாராத்தான் போட்டியின் போது, தண்ணீரினை சேமிப்பதுடன் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தி தண்ணீர் தட்டுபாட்டிற்கு தீர்வு காணவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் வலியுறுத்தபட்டது. மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சுழல் கோப்பைகளும், பரிசுகளும் வழங்கபட்டன. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முரளி, கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.