நீலகிரி : இரண்டாம் சீசனுக்காக சர்வதேச புகழ் வாய்ந்த உதகை ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைகளில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகள் மற்றும் பசுமை வாய்ந்த புல் தரைகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் முதல் சீசனின் போது அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசனை கொண்டாட உதகைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இச்சமயங்களில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை காட்டிலும் வடமாநிலங்களைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவது வழக்கம். இந்த நிலையில், முதல் சீசனுக்காக பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் கவாத்து செய்யப்பட்டது. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு அனைத்து செடிகளிலும், மலர்கள் பூத்து குலுங்கின. இம்முறை தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், தென்மேற்கு பருவமழை பொய்த்தாலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையால் ரோஜா பூங்காவில் உள்ள புல் தரைகள் மற்றும் மலர் செடிகளில் பசுமை அப்படியே உள்ளது.

எனவே, அவைகளை இரண்டாம் சீசனுக்கு தயார் செய்யும் பணிகளில் தற்போது பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், புல் தரைகளை பராமரிக்கும் பணி, வளர்ந்த புற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை இரண்டாம் சீசனின் போது, ரோஜா பூங்காவில் முதல் சீசன் போன்று, 4 ஆயிரம் வகைகளில் நடவு செய்யப்பட்டுள்ள அனைத்து செடிகளிலும் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் சீசனுக்கு மட்டுமின்றி, அடுத்த இரு மாதங்கள் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்ல வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.