12 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்ட்ட கோவை - பெங்களூரூ இரவு நேர ரயில் சேவையை நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் கோவை எம்.பி.க்கள் வலியுறுத்திறுத்தினர்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்சேவை வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் பி.ஆர்.நடராஜன் மற்றும் சண்முக சுந்தரம் எம்பிக்கள் உரையாற்றியுள்ளனர். இது குறித்து நேற்று நடைபெற்ற ரயில்வே மானிய கோரிக்கையின் மீது மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆற்றிய உரையில், பொள்ளாச்சி - கோவை இடையிலான அகல ரயில் பாதை துவங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பணிகள் துவங்குவதற்கு முன்பு கோவை - ராமேஸ்வரம், கோவை - கொல்லம்,கோவை - மதுரை போன்ற வழித்தடங்களில் இயங்கி வந்த ரயில்கள் நீண்ட கோரிக்கைக்கு பின்பு மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடங்களில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்கிட வேண்டும். மேலும், கோவை - பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அன்றைய ரயில்வே துறை அமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பு இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன், என்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனுடன் இணைந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரமும் இதனை வலியுறுத்தினார்.