சென்னை : கோவையில் ரூ. 178.26 கோடி மதிப்பில் அமைக்கவிருக்கும் வெள்ளலூர் பேருந்து நிலையம் நடப்பாண்டிற்குள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை வெளியிட்டார். அதில் கோவையில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கோவை மாநகராட்சி, தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியாகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அம்மா அவர்கள், கோவையில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு
நிதியாண்டில் இப்பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.