நடப்பாண்டிற்குள் வெள்ளலூர் பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை : கோவையில் ரூ. 178.26 கோடி மதிப்பில் அமைக்கவிருக்கும் வெள்ளலூர் பேருந்து நிலையம் நடப்பாண்டிற்குள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : கோவையில் ரூ. 178.26 கோடி மதிப்பில் அமைக்கவிருக்கும் வெள்ளலூர் பேருந்து நிலையம் நடப்பாண்டிற்குள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை வெளியிட்டார். அதில் கோவையில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது, கோவை‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ திருச்சி ஆகிய மாநகராட்சிகளில்‌ உள்ள நீர்‌ நிலைகளில்‌ கழிவுநீர்‌ கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ நிலத்தடி நீர்‌ செறிவூட்டுதல்‌ போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும்‌ சாத்தியக்‌ கூறுகளைக்‌ கண்டறிய, உரிய ஆய்வுப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்‌. 

கோவை மாநகராட்சி, தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியாகும்‌. இங்கு நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்‌ பொருட்டு, அம்மா அவர்கள், கோவையில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம்‌ அமைக்கப்படும்‌ என அறிவித்திருந்தார்‌. அதன்‌ அடிப்படையில்‌, வெள்ளலூரில்‌ 61.62 ஏக்கர்‌ பரப்பளவில்‌, 178.26 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, அரசு மானியம்‌ மற்றும்‌ உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு

நிதியாண்டில்‌ இப்பேருந்து நிலையம்‌ செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...