திருப்பூர் : குவைத் நாட்டில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வரும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமூர்த்தி மற்றும் செல்வம். இவர்கள் இருவரும் அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். திருமூர்த்தியின் மனைவி பெயர் ராஜேஸ்வரி. செல்வம் என்பவரின் மனைவி பெயர் வசந்தாமணி. இவர்கள் இருவருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்வராஜ் என்ற இடைத்தரகர் அறிமுகமாகி உள்ளார். அவரது பேச்சை கேட்டு, ராஜேஸ்வரி மற்றும் வசந்தாமணி ஆகிய இருவரும் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு கடந்த மே மாதம் அனுப்பியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு பிறகு, சம்பளம் முறையாக கொடுக்காமல், கொடுமைப்படுத்தி வருவதாக வீடியோ மூலம் பேசி தனது குடும்பத்தாருக்கு அந்த இரு பெண்களும் அனுப்பியுள்ளனர். அதன் பிறகு, கடந்த இரு மாதங்களாக எந்தவிதமான தொடர்பும் அவர்களிடத்தில் இல்லை என்றும், இடைத்தரகர் செல்வராஜூம் முறையான பதிலை கூற மறுப்பதாகவும் கூறி, குவைத் நாட்டில் கொத்தடிமையாக இருக்கும் இரு பெண்களையும் மீட்டு தரக்கோரி இரு குடும்பத்தினரின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.