கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை மீட்பு பணி ஒத்திகை

கோவை : கோவையில் பருவமழை தீவிரமடைய உள்ளதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினரால் ஒத்திகை நடத்தப்பட்டது.


கோவை : கோவையில் பருவமழை தீவிரமடைய உள்ளதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினரால் ஒத்திகை நடத்தப்பட்டது.



கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருவ மழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கோவை வடக்கு தீ அணைப்பு துறையினர் முத்தண்ணன் குளத்தில் போலி ஒத்திகை நடத்தினர்.



இதில், நீர் நிறைந்த இடங்களில் சிக்கியவர்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகள் பார்க்கப்பட்டது. மேலும், ரப்பர் போட்டில் சென்று காப்பாற்றுவது, தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றுவது போன்ற பல ஒத்திகைகள் இந்த நிகழ்வில் இடம்பெற்று இருந்தன. 



அதேபோல, நீரில் மூழ்கியவரை மீட்டு அவருக்கு எப்படி முதலுதவி சிகிச்சை கொடுப்பது, தேங்கிய நீர் களை எப்படி வெளியேற்றுவது போன்ற பல ஒத்திகைகள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு காட்டப்பட்டது. 



இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது கோவை வடக்கு கவுண்டம் பாளையம் நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், கமாண்டோ, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...