திருப்பூரில் பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுப்பு : ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் குமார் நகர் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் லலிதாதேவி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கீதாகுமாரி உள்ளிட்ட 3 ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்தும், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வடக்கு வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...